கோவை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரிபொருள் வரிச்சலுகை: முதலமைச்சர்

கோவை: கோவையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் வகையில், எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் வகையில், எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள் இரவில் இங்கேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் விமானங்களை இரவில் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, எரிபொருளுக்கான வரிச்சலுகை வழங்கினால் விமானங்களை இரவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.



இந்நிலையில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவைக்கு வந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இரவு இங்கு நிறுத்தப்படும் இணைப்பு விமானங்களை பல்வேறு இந்திய நகரங்களுக்கு இயக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் விமான எரிபொருள் வரிச்சலுகை வழங்கப்பட உள்ளது, என்றார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினரின் செயல்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட்டு அறிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அருங்காட்சியகம் அமைந்துள்ள ரயில் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டன.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...