கோவையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அரிய வாய்ப்பு: டி.என்.சி.ஏ., பயிற்சி முகாம் தொடக்கம்

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

பி.எஸ்.ஜி., ஐஎம்எஸ்ஆர் மைதானங்களில் 9-வது ஆண்டு கோடை பயிற்சி முகாம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று முதல் மே 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த இளம்வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் சான்றிதழ் பெற்ற சிறந்த பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்தப் பயிற்சிக்காக மாவட்ட அளவில் இருக்கும் அகடாமியில் இருந்து, ஒவ்வொரு பிரிவிலும் 45 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வாளர் ஆர். வெங்கடேஷ் கூறுகையில், "வீரர்கள் பல்வேறு அகாடமிகளில் பயிற்சி பெற்று வரும் நிலையில், இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற முகாம்கள் அவர்களது வாழ்க்கையில் முக்கியமானதாகும். இது போன்ற முகாம்களில் ஆட்ட நுணுக்கங்களை அனுபவ வீரர்களிடம் இருந்து பெற்று, இளம் வீரர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்," என்றார்.



இந்தப் பயிற்சி முகாமில் இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் விஜய்சங்கர் ஆகியோர் இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...