திருப்பூரில் இளையோருக்கான தேசிய இறகுப் பந்து அணி தேர்வு போட்டி தொடக்கம்

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

இந்திய இறகுப் பந்து கழகம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப் பந்து அணி தேர்வுக்கான போட்டிகள் திருப்புர் மோகன்ஸ் அகாடமியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 ஆண்கள் 400 பெண்கள் என 1200 இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஆண்கள் பிரிவு, பெண்கள், இரட்டையர் பிரிவுகள் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளின் கீழ் 920 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் ரேங்கிங் அடிப்படையில் முன்னணியில் உள்ள வீரர்களுடன், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில், வெற்றி பெறும் 14 வீரர்கள் தேசிய அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெறுவர்.

வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜூவாலா கட்டா, வரும் 25-ம் தேதி வருகிறார். வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் இந்திய அணி தேர்வு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக வீரர்களுக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தமிழக வீரர்கள் வெற்றி பெற ஊக்கத்தை வழங்குவதாகவும் வீரர்கள் கூறினார்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...