எஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்கால தடை

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பா.ஜ.க., பிரமுகருமான எஸ்.வி. சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பா.ஜ.க., பிரமுகருமான எஸ்.வி. சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாகப் பேசி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு கடுமையான எதிர்ப்பு பத்திரிக்கையாளர்கள் இடமிருந்து கிளம்பியது. இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர்.

இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு தொடர்பாக கடுமையான கருத்துகளையும் கூறியது. ஆனாலும், போலீஸார் இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. அவர் வெளியே பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என சுதந்திரமாக நடமாடி வருகிறார். இந்நிலையில் தான், கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்திலும் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கு விசாரணையில் வரும் ஜூலை 5-ம் தேதி, எஸ்.வி.சேகர் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...