தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி; 77 பேர் படுகாயம்: முதலமைச்சர் இரங்கல்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 77 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 77 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று 100-வது நாள் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.



முற்றுகை போராட்டத்திற்காக ஊர்வலமாக வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த மக்கள் கற்களை வீசி, அலுவலக கண்ணாடிகளை உடைத்தனர். மேலும், ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த சூழலில், நிலைமை கை மீறி போனதாகக் கூறி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10-ம் வகுப்பு மாணவி உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 77 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இரங்கல்

இக்கட்டான சூழலில் தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் கூறி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக ஆளுநரும் இந்த சம்பவத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.



அரச பயங்கரவாதம்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டங்களைத் தெரிவித்த நிலையில், மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டது, அரச பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்காகப் போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது." என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த பின்னர், நிவாரணம் கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு ஈடாகாது என்றும், இந்த அரசு மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...