ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டி ; மத்திய பிராந்திய அணி வெற்றி

நீலகிரி: குன்னூரில் நேற்று நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியில் மத்திய பிராந்திய அணி வெற்றி பெற்றது.

நீலகிரி: குன்னூரில் நேற்று நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியில் மத்திய பிராந்திய அணி வெற்றி பெற்றது.



 

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. ராணுவ விளையாட்டு கட்டுப்பட்டு வாரியத்தின் கோப்பைக்கான இந்த ஓட்ட பந்தயத்தில், தேசிய அளவிலான ஆறு குழுக்களில் கலந்து கொண்டது. ஒவ்வொரு குழுவிலும் 6 வீரர்கள் வீதம், 36 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். 

ராணுவ வீரர்களின் வேகம், உடல் திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த போட்டி, வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிகளில், 10 கி.மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இதில், மத்திய பிராந்திய அணியின் அனில் குமார் யாதவ், 31.56 நிமிடங்களில் வந்து முதலிடத்தையும், தென் பிராந்திய அணியின் கரன் சிங், 32 நிமிடங்களில் வந்து 2-வது இடத்தையும், மத்திய பிராந்திய அணியின் சுந்தர் சிங், 32.01 நிமிடங்களில் வந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 

குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், புள்ளிகள் கணக்கில் முதலிடத்தை மத்திய பிராந்திய அணி பெற்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் கமாண்டண்ட் சங்வான் பதக்கங்களை வழங்கியதுடன், முதலிடத்தைப் பெற்ற மத்திய பிராந்திய அணியினருக்கு வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...