ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து கோவையில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து கோவையில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.


Video: Laxman

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...