மேட்டுப்பாளையத்தில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு தொடக்கம்: இயற்கையின் அழகை 'ஈகிள் வியூ' பார்வையில் கண்டுரசிக்க பொதுமக்கள் ஆர்வம்

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.


மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சாகச விளையாட்டு கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பலூன் மூலம் வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில், பங்கேற்று பலூனில் பறந்தபடி இயற்கை அழகை ரசிக்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இளம் வயதினருக்கு, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் மனதில் உள்ள தேவையற்ற அச்ச உணர்வைப் போக்கி, மனவலிமை கொண்டவர்களாக எந்த சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்ற இது போன்ற சாகச விளையாட்டுக்கள் உதவும் என நம்பப்படுகிறது. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு கோடை விடுமுறை காலங்களிலும் பலூன் மூலம் குறிப்பிட்ட உயரம் வரை வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் விளையாட்டு பூங்கா [பிளாக் தண்டர்] மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த சாகச விளையாட்டு இந்திய விமானப் படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே சீரான சீதோசனம் மற்றும் அளவான காற்று வீசும் பகுதிகளாக கருதப்படும் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே ஆண்டுதோறும் பலூன் திருவிழா மற்றும் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பாக துறைச் சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுவதால், இந்த சாகச விளையாட்டில் பங்கேற்று இயற்கையின் அழகை ஈகிள் வியூ எனப்படும் கழுகுப் பார்வையில் காண சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...