மேட்டுப்பாளையம் வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை

மேட்டுப்பாளையம்: வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் ஹெலிக்காப்டர் மூலம் வானில் வட்டமிட்டு பறந்தபடி இயற்கை அழகை ரசிக்க அழைப்பு விடுத்து நேற்று முதல் அதற்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருபது நிமிடங்கள் பறந்தபடி மேட்டுப்பாளையம் பகுதியினை மேலிருந்து பார்த்து ரசிக்க நபர் ஒருவருக்கு ரூபாய் நான்காயிரம் என்ற கட்டணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



முதல் நாளான நேற்று பலரும் ஆர்வமுடன் இதில் பயணித்த நிலையில், மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இப்பகுதி காடுகளின் மேலே ஹெலிக்காப்டர் பறந்து செல்லத் தடை விதித்து நோட்டிஸ் வழங்கினர். வனத்தின் இயற்கை அழகை காணும் வகையில் காடுகளை ஒட்டி பயணிகளோடு ஹெலிக்காப்டர் தாழ்வாக பறப்பதால் இதன் பெரும் சப்தத்தில் வன உயிரினங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இங்குள்ள யானைகளின் வழித்தட பாதை மற்றும் ஆற்றங்கரையோரத்தின் மேலே ஹெலிக்காப்டர் பறந்தால் யானைகள் திசை மாறி ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மேலும், மனித-விலங்குகள் மோதல்கள் அதிகம் நிகழும் மேட்டுப்பாளையம் பகுதியில் இது போன்ற நிகழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், தடையை மீறி வனப் பரப்பிற்கு மேலோ அல்லது அதன் அருகாமையிலோ    ஹெலிகாப்டரை இயக்கினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் இந்த நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...