நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி தற்கொலை

விழுப்புரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்ற அவர், தற்போது எழுதிய நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.

விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

குளறுபடி

கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, இந்தாண்டு பிரதீபா நீட் தேர்வு எழுதியிருந்தார். கடந்த ஆண்டு அவர் நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், போதிய பணம் இல்லாததால் அரசு கல்லூரியில் இந்த சேர்ந்து விடலாம் என காத்திருந்தார். ஆனால், இரண்டாவது முறையாகவும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



முன்னதாக தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வினாத்தாளில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் முன்பே பிரதீபா, தமிழ் மொழியில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

மாணவி பிரதீபா மரணத்துக்கு வினாத்தாள் குளறுபடியும் ஒரு காரணமாகியுள்ளது. ஆண்டு தோறும் நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு வலுத்துள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...