புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு: பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

கோவை: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், பா.ஜ.க., சார்பில் தமிழிசை சவுந்தரராசன், சி.பி.ஐ.(எம்)., சார்பில் கே.பலகிருஷ்ணன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உ.தனியரசு, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு.தமிழரசன் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைப் பற்றியும் அதன் பின்னணி குறித்தும் கட்சித் தலைவர்கள், தங்களது கருத்துகளை முன்வைத்தார்கள். அப்போது, இயக்குநர் அமீர் பேசத் தொடங்கிய உடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க.,வினர் அமீருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அரங்கில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை நிகழ்ச்சி நடந்த அரங்கின் நிர்வாகியிடம் சனிக்கிழமை புகாரை பெற்ற பீளமேடு போலீசார், தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் அதன் கோவை செய்தியாளர் சுரேஷ் மற்றும் இயக்குனர் அமீர் மீதும் 153 ஏ ( இரு குழுக்களிடையே பிரிவினையைத் தூண்டுதல்), 505( பொதுமக்களிடையே அமைதியைக் குலைத்து , அரசுக்கு எதிராக நடந்து கொள்ளுதல்) மற்றும் 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த சூழலில், ஊடகங்களை மிரட்டும் போக்கில் தமிழக அரசு செயல்படுவதாக கூறி கோவை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதே போல், சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம் உட்பட தமிழகத்திலுள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.





Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...