விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி புலி,கரடி வேடமணிந்து வந்த விவசாயிகள்

கோவை: வனப் பகுதிகளில் இருந்து வெளிவரும் சிறுத்தை, செந்நாய் போன்ற விலங்குகளை கணக்கெடுத்து அதனை ஊருக்குள் வருவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வன விலங்குகளை போல வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை: வனப் பகுதிகளில் இருந்து வெளிவரும் சிறுத்தை, செந்நாய் போன்ற விலங்குகளை கணக்கெடுத்து அதனை ஊருக்குள் வருவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வன விலங்குகளை போல வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் ஆனைகட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து காட்டு விலங்குகளான யானை, சிறுத்தை போன்றவைகள் அதிகமாக விவசாய பயிர்கள் மற்றும் ஆடு மாடுகள் மற்றும் விவசாயிகளை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் வன விலங்குகளின் வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். 



வனத் துறையில் போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால் வன விலங்குகள் வரும் பொழுது அவர்கள் வருவதற்கு வெகு நேரம் ஆவதால் வனத் துறையில் போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கென தனிக்குழு அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். 

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...