15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தொ.மு.ச., பேரவை துணைத்தலைவர் ரத்தினவேல் பேட்டியின்போது கூறுகையில், "தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 28-ந்தேதி தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு சென்று முற்றுகையிட உள்ளோம்," என்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுக்குழு தலைவர்கள் எல்.பி.எப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராக்கிமுத்து, சி.ஐ.டி.யு., மூர்த்தி, டி.டி.பி.டி.எஸ்., ஜீவா மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., டி.டி.பி.டி.எஸ்., தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...