2016-ல் கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு பதில்: கோவை மாவட்டம் நிர்வாகத்தின் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: வர்தா புயல் நிவாரணம் தொடர்பாக அரசு ஊழியர்களிடம் ஒருநாள் சம்பளம் பிடிக்கக் கடந்த 2016-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகள் கழித்து, தற்போது அம்மனுவைப் பரிசீலிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வர்தா புயல் நிவாரணம் தொடர்பாக அரசு ஊழியர்களிடம் ஒருநாள் சம்பளம் பிடிக்கக் கடந்த 2016-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகள் கழித்து, தற்போது அம்மனுவைப் பரிசீலிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களிடமும் ஒப்புதல் பெற்று, ஒரு நாள் ஊதியத்தை நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சிரியரிடம் 2016-ம் டிசம்பர் 19-ம் தேதி ஆண்டு மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து தகவல் ஏதும் தெரியாத நிலையில், மீண்டும் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜுன் 8-ம் தேதி இது குறித்து பரீசிலனைக்கு எடுத்துக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது மனுதாரரை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.



இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் நம்மிடம் கூறுகையில், "வர்தா புயல் வந்து 2 ஆண்டுகள் கழித்து மனு பரீசிலனை செய்யப்பட்டது. இது மாவட்ட நிர்வாகத்தின் காலம் கடந்த நடவடிக்கையாகும். மனுக்கள் மீதான பரீசிலனை காலம் கடந்து செய்யப்படுவதால் என்ன பயன் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்ட போது வருவாய் பிரிவில் ஆட்கள் இல்லை, தற்போது தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகின்றனர். மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு இது ஒன்றே சாட்சி," என்றார்.

இதுபோன்ற காலதாமதம் நடவடிக்கையால் குறைதீர் கூட்டத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...