அகலி அருகே வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகள் பத்திரமாக மீட்பு

கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.


கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.



கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய பருவமழையால், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, ஆறுகள் மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்த நிலையில், கேரள மாநில மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் அகலி அருகே உள்ள ஆற்றில் நேற்றிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சுகுணன் மற்றும் வல்சம்மா, செல்வராஜ் மற்றும் செல்லம்மா, பழனியப்பன் மற்றும் ஜானகி ஆகிய 3 தம்பதிகள் சிக்கி கொண்டனர். 



இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை, அவர்கள் 6 பேரும் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...