கோவையில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : கைதானவர்களுக்கு போலீஸ் காவல்

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வாரம் சாய்பாபா காலனியில் போலீசார் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் ரூ. 2,000 நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவற்றை சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் உள்ள அலுவலகத்தில், ரூ. 83 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனிடையே, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிதர் முகமது, சுந்தர் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போலி நோட்டுகள் அச்சடித்த வழக்கில் ஆனந்திற்கு ஒரு நாளும், கிதா் முகமது, சுந்தா் ஆகியோருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி பாண்டி உத்தரவிட்டார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...