நாளை வெளியாகும் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க தீர்ப்பால் ஆட்சி மாற்றம் நிகழும் : கோவையில் செந்தில்பாலாஜி நம்பிக்கை

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை குறிச்சி பகுதியில் அ.ம.மு.க., சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நாளை (ஜுன் 14) வெளியாகும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, 18 பேரும் மீண்டும் சட்டமன்றப் பணிகளை செய்யும் வகையில் நல்ல தீர்ப்பாக வரும். மேலும், மீண்டும் சட்டமன்றத்திற்கு டி.டி.வி., தினகரன் தலைமையில் செல்வோம். 6 கோடி வாக்காளர்களும் விரும்பும் வகையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கான தீர்ப்பாக அமையும். தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாகவும் இருக்கும். 

மேலும், சென்னை - சேலம் இடையே புதிய சாலையினை மக்கள் எதிர்ப்பை மீறி அடாவடித்தனமாக செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் தயாராக இல்லை. மத்திய மோடி அரசின் நிழல் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. விரைவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் இருக்கும். டி.டி.வி., தினகரன் அடுத்த முதலமைச்சராவர். 

தமிழக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்து வரும் அமைச்சர்கள் ஆட்சி.மாற்றத்திற்குப் பின்னர் சிறைக்கு செல்வார்கள், என்றார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...