உலக இரத்த கொடையாளர் தினம் : கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை: உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை: உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



உலகம் முழுவதும் இன்று இரத்த கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் அரசு ரத்த வங்கிகள் இணைந்து நடத்திய இந்த பேரணி இன்று காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கூடினர். 



மழை காரணமாக சிறிது காலம் தாமதமாக துவங்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் என கூறியதை தொடர்ந்து காத்திருந்தனர். நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பார் என்பதாலும் மழை காரணமாக ஏற்கனவே ஒரு மணி நேரம் தாமதமாகி இருந்த நிலையில், பொறுமையிழந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் பதினோரு மணிக்கு வந்து தொடங்கி வைத்ததால், முனுமுனுத்படியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் பங்கேற்பே கட்டாயப்படுத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர்களை காக்க வைக்கப்பட்டது மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...