சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்: வால்பாறையில் தொடரும் அச்சுறுத்தல்

கோவை: வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை: வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் புலிகள் யானைகள் உள்ளன. இந்நிலையில், சிறுத்தைப்புலிகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் நாய்களை கொன்று தின்று வருகின்றன.

மேலும், எதிரில் தென்படும் மனிதர்கள், குழந்தைகளையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில், இன்று மாலை வால்பாறையை அடுத்த சின்கோனா தேயிலை தோட்டத்தில் மாதவி (36) என்ற பெண் தொழிலாளி தனது வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்தார்.

அப்போது தேயிலை செடிகள் மத்தியில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவரைத் தாக்கி தூக்கி கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பாலகிருஷ்ணன் கூச்சலிட்டபடி சிறுத்தையை விரட்டி தாக்கியுள்ளார்.

தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே சிறுத்தை மாதவியை காட்டில் போட்டு விட்டு தப்பி ஓடியது.

மாதவியை மீட்ட அவர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வால்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுத்தைப் புலியின் நடமாட்டம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...