கோவை, திருப்பூர், நீலகிரியில் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வானில் பிறை தெரியாததையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று தான் ராம்ஜான் கொண்டாடப்பட்டது. கோவையில் கரும்புக்கடை, பூமார்க்ட், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.



இதேபோல, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூரின் மங்களம், பல்லடம், பெரியதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. ஜெய்வாபாய் பள்ளி அருகிலும் கூட்டுத்தொழுகை நடந்தது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில், ஈகை திருநாளை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடி வருகின்றனர். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ளதால் நேற்றே ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...