சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் 25-ம் தேதி தொடக்கம்

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, வரும் 25-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில், பிரதமர் முன்னிலையில் காணொளி காட்சி மூலம், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தொடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூன்றாம் ஆண்டு விழாவில், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சூரிய மின் சக்தி நிலையங்களை தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சூரியமின் சக்தி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் கூறியதாவது, "ஜூன் 25-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஸ்மார்ட் சிட்டி 3-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவிருக்கிறது. இதில், உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகேயும், கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கு வளாகத்திலும், ரூ.11.55 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இரண்டு சூரிய மின்சக்தி நிலையங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...