ஜெனரிக் மருந்துகளை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு படும்படி வைக்க வேண்டும் : மருந்துக்கடைகளுக்கு உத்தரவு

அத்தியாவசிய மருந்துகளில் ஒன்றான ஜெனடிக் மருந்துகளை, வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மருந்துக்கடைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அத்தியாவசிய மருந்துகளில் ஒன்றான ஜெனரிக் மருந்துகளை, வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மருந்துக்கடைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

.உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவக் கருவிகள் அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஜெனடிக் மருந்துகளின் விலையை மத்திய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் கண்காணித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும், பிராண்ட் பெயரில் உள்ள மருந்துகளின் விலை மிக அதிகமாக உள்ளது. பிராண்ட் பெயரில் உள்ள மருந்துகளுக்கு இணையாக ஜெனரிக் (பொதுப்பெயரில்) மருந்துகள் பல மடங்கு குறைந்த விலையில் இருந்தும், கமிஷனுக்காக நோயாளிகளிடம் மருந்துக்கடைக்காரர்களும் இதைக் கூறுவதில்லை. 

மருத்துவர்கள் ஜெனரிக் பெயரை மட்டுமே சீட்டில் எழுதித்தர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், பிராண்டுகளால், வீண் பணச்செலவை தடுக்கும் வகையில், பொதுமக்களே பொதுப்பெயரில் உள்ள மருந்துகளைத் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அவற்றை மருந்துக்கடைகளில் வாடிக்கையாளர்களின் காட்சிக்கு வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் எஸ்.ஈஸ்வர ரெட்டி மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில், மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரிய அறிவுறுத்தலின்படி, சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மருந்துக்கடையிலும், ஜெனரிக் எனப்படும் பொதுப்பெயரிலான மருந்துகளைத் தனி அலமாரியில் வைத்திருக்க வேண்டும். மலிவு விலையில் பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்க மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப இதை மருந்துக்கடைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...