வால்பாறையில் நால்வரை தாக்கிய சிறுத்தை சிக்கியது

கோவை: வால்பாறையில் வட்டாரத்தில் நால்வரை தாக்கியோடு, தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூடு வைத்து பிடித்தனர்.

கோவை: வால்பாறையில் வட்டாரத்தில் நால்வரை தாக்கியோடு, தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூடு வைத்து பிடித்தனர். 



கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தைப் புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த சிறுத்த இதுவரை நான்கு பேரை காயப்படுத்தியதோடு, ஒருவரை கொன்றது. இதன் காரணமாக வால்பாறையில் நேற்று  மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் வால்பாறையில் போக்குவரத்து முடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சின்கோனா பகுதி குடியிருப்பு உட்பட மூன்று இடத்தில் கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டது. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன காமிரா பொருத்தப்பட்டது. 



இந்நிலையில், இன்று அதிகாலை சின்கோனாவில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தைப் புலி சிக்கியது. தொடர்ந்து சிறுத்தை சிக்கிய கூண்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அது, ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்று வனத்துறை மருத்துவர் மனோகரன் கூறியுள்ளார். 

தற்போது, சிறுத்தைப் புலி பிடிபட்டிருந்தாலும், மேலும், சில சிறுத்தைகள் சுற்றித் திரிவதால், வால்பாறையில் தொடர்ந்து, கூண்டு வைத்து கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...