கமல்ஹாசன் காமெடியனாக பார்க்கப்படுவார் : கொ.ம.தே.க., ஈஸ்வரன் கோவையில் பேட்டி

கோவை: சுய லாபத்திற்காக தொடர்ந்து கர்நாடக அரசை பாராட்டி வந்தால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை மக்கள் காமெடியனாகத் தான் பார்ப்பார்கள் என்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கோவை: சுய லாபத்திற்காக தொடர்ந்து கர்நாடக அரசை பாராட்டி வந்தால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை மக்கள் காமெடியனாகத் தான் பார்ப்பார்கள் என்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சென்னை - சேலம் புதிய எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பதில் மெத்தனம் நிலவுகிறது. சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்க வேண்டும்.

கபினி அணையில் கர்நாடக அரசு நீர் திறந்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பது கவலையாகவும், சிரிப்பாகவும் உள்ளது. சொந்த நலனுக்காக கர்நாடக அரசைப் பாராட்டியுள்ளார் அவர். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் மக்கள் அவரை காமெடியனாக பார்ப்பார்கள். 

ராஜீவ்காந்தி

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய நல்ல தீர்வு காண வேண்டும். தங்க தமிழ்ச்செல்வனை போல 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பங்கள் நீங்க வாய்ப்புள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை.

டாஸ்மாக்கினை மட்டுமே நம்பி அரசை நடத்த முடியாது. தொழிற்சாலைகள் மூடப்படுவதும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதும் தொடர்ந்து வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசு, மூடப்பட்ட 50 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், தொழிற்சாலைகள் மூடலுக்கு பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., மட்டும் காரணமல்ல என்பதால், குழு அமைத்து விசாரிக்க வேண்டும். உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் மக்கள் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு முன்வர வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...