பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8,000 பேர் காத்திருப்பு போராட்டம்

கோவை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கோவையை சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

கோவை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கோவையை சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். 

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.380 வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இது குறித்து, அச்சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "தமிழகம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின் பணிகளை செய்து வருகிறோம். 

ஆனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பணியும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்வதில்லை என அதிகாரிகள் அரசுக்கு தகவல் அனுப்புகின்றனர். புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை." என்றார். 

இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளோம் என்று பணியாளர்கள் எச்சரித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...