கூடலூர்-பந்தலூர் வட்ட பொதுமக்கள் யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

நீலகிரி: கூடலூர்-பந்தலூர் வட்ட பொதுமக்கள் யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீலகிரி: கூடலூர்-பந்தலூர் வட்ட பொதுமக்கள் யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடலூர் வனக் கோட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மனித வனவிலங்கு மோதல்களை குறிப்பாக யானை தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்திக் கொள்ளவும், பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், உயிரிழப்பினை தவிர்க்கவும் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* இரவு நேரங்களில் குறிப்பாக தற்போதைய மேகமூட்டமாக மற்றும் பனிக்காலங்களில் வெளியே நடமாடும் போது கையில் அவசியர் டார்ச்லைட் உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* முடிந்தவரை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும். 

* மது அருந்தி விட்டு இருட்டு நேரத்தில் தனியே நடமாட வேண்டாம், அருகில் உள்ள வனப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்.

* வீட்டின் அருகில் வாழை, பலா, கரும்பு, பாக்கு போன்ற யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்.

* தற்போதுள்ள இம்மரங்களின் அருகில் இரவில் செல்ல வேண்டாம். 

* ஏற்கனவே அரசுத்துறைகள் மூலமாக அமைந்துள்ள வேலிகள், யானை தடுப்பு அகழிகளை சேதப்படுத்த வேண்டாம். யானை வழக்கமாக செல்லும் பாதையை வேலி அமைத்து அதன் பாதையை அடைக்கக் கூடாது. 

* வன விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. மேலும் உணவு கழிவுகளை பாதையில் போடக்கூடாது. 

* வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்றாலோ உறவினர் வீட்டிற்குச் சென்றாலோ மாலை இருட்டுவதற்குள் வீடு திரும்புவது நல்லது. வீட்டின் அருகில் வன விலங்குகள் வந்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். குறிப்பாக அருகில் உள்ள பீட் வனக் காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கவும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

மாவட்ட வன அலுவலர் - 04262 - 261302

வனச்சரக அலுவலர் - கூடலூர், ஓவேலி - 9443523414

வனச்சரக அலுவலர் - பந்தலூர் - 9488520346

வனச்சரக அலுவலர் - பிதர்காடு - சேரம்பாடி - 8903771610

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...