உதகையில் பிரபல ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ. 48,000 அபராதம் விதிப்பு

நீலகிரி: உதகையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான அடையார் ஆனந்த பவனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

நீலகிரி: உதகையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான அடையார் ஆனந்த பவனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். 

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற இன்னசென்ட் திவ்யா, சில நாட்களிலேயே 19-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதன்படி, பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள், பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை உபயோகிக்கும் டம்ளர்கள் தட்டுக்கள் என பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை அங்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் தடையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீறி அதை விற்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கமர்சியல் சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் உதகை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கிண்ணங்கள், மேசை விரிப்புகள் மற்றும் டம்ளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுமார் 24 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, ஒரு கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரூ. 2,000 வீதம் ரூ. 48,000 அபராதம் விதிக்கப்பட்டது.



மேலும், இந்தக் கட்டிடத்தில் 40 மேசைகள் இருக்கும் அளவுக்கே அனுமதி வாங்கியுள்ள நிலையில், 100 மேசைகளுக்கு மேல் பயன்படுத்துவதைக் கண்ட நகராட்சி ஆணையர் ஓட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...