நிலச்சரிவு ஏற்பட்டதால் சிறுவாணி வழிச்சாலையில் மாற்றுப்பாதை

கோவை: சிறுவாணிக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் தற்காலிகமாக மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை: சிறுவாணிக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் தற்காலிகமாக மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. 

சாடிவயல் சிறுவாணி சாலையிலிருந்து சிறுவாணி அணைக்கு செல்ல சுமார் 15 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த சிறுவாணி அணைக்கு செல்ல 22 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டிதான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இந்த அணைக்கு செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் 16-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலையே துண்டிக்கப்பட்டது. மேலும், சிறுவாணி அணையின் நீர் அளவைத் தெரிந்துகொள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 



இந்த நிலையில், இன்று சிறுவாணிக்கு செல்லும் வழிக்கு செல்ல தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியின் வழியாக இந்தப் பாதை செல்கிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...