கோவை - கேரளா எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

கோவை: தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதி வழியாக மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து எல்லை பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை: தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதி வழியாக மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து எல்லை பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.



தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில், எல்லையோர பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் புகைப்படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு, இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பெண் மாவோயிஸ்ட் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆனைகட்டி வழியாக கோவைக்கு சிகிச்சைக்கு அழைத்து வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதனையடுத்து தமிழக கேரள எல்லைப் பகுதியான ஆனைகட்டி பகுதியில் நக்சல் தடுப்பு படையினர் இன்று மாலை திடீர் வாகன சோதனை நடத்தினர். ஆனைகட்டி வழியாக கோவைக்குள் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவுவதை தடுக்க இந்த திடீர் சோதனையானது நடத்தப்படுவதாக சோதனையில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர்.



இந்த திடீர், சோதனையால் தமிழக - கேரள எல்லையோரங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...