அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

நீலகிரி: குன்னுார் அருகே அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் உற்பத்தி இலக்கை அதிகப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

நீலகிரி: குன்னுார் அருகே அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் உற்பத்தி இலக்கை அதிகப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய  ராணுவத்திற்கு உறுதுணையாக அகில இந்திய அளவில் 41 தளவாட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 11 தொழிற்சாலைகள் வெடிமருந்துகளைத் தயாரித்து வருகின்றன. அவற்றில், அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் ஒன்றாகும். இந்தத்  தொழிற்சாலை 1904-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், கடந்த மாதம் 21-ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் வேலை நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொழிற்சாலையின் உற்பத்தி இலக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டில் இதே போன்று உற்பத்தி நிறுத்திவைப்பு சம்பவம் நடைபெற்றது. இதேபோல, தற்போது நடைபெறுமா என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், விலை குறைவாக கொடுத்தாலும் மத்திய அரசு உற்பத்தி இலக்கை அதிகரிக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நமது நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் 30 சதவீதங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 70 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பாரம்பரியமுள்ள இந்த தொழிற்சாலை  மத்திய அரசின் கொள்கையால் நலிவடையும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து அருவங்காடு தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் நலன் கருதி சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி., கூட்டுக்குழு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. தொழிற்சாலை நுழைவாயில் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அருவங்காடு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...