தரவரிசை பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் சிறந்த ஸ்மார்ட் சிட்டி கோவை; தேசிய அளவில் எந்த இடம் தெரியுமா?

கோவை: மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலின் அடிப்படையில் கோவைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது.


கோவை: மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலின் அடிப்படையில் கோவைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு, மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை அறிவித்தது. தமிழகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முயற்சியால் மாநில அரசு நிதியுடன் இணைந்து 12 சீர்மிகு நகரங்களை ஒதுக்கியுள்ளது. இதன் திட்ட காலம் 5 ஆண்டுகள் ஆகும். மத்திய அரசு ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது. அதற்கு, இணையாகத் தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது.

இந்த திட்டப்படி, கோவை மாநகராட்சியும் ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை பெற்றது. மாநகரை 'ஸ்மார்ட்'ஆக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாதிரி சாலைகள், தூய்மையான குளங்கள், நல்ல சாலைகள் என கோவையை மாற்றி எடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு சிறந்த முறையில் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவரும் நகரங்களை கணக்கெடுக்கும் பணியினை மத்திய அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். அந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 82.26 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சி தேசிய அளவில் 14-வது இடத்தைப் பெற்று, தமிழக அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

31.46 மதிப்பெண்களுடன் சென்னை தேசிய அளவில் 37-வது இடத்திலும், 16.39 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு 49-வது இடத்தையும் பெற்றுள்ளது.

நாட்டிலேயே சிறந்த ஸ்மார்ட் சிட்டியாக நாக்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 259.96 மதிப்பெண்களுடன் அந்த நகரம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "ஸ்வச் சர்வேக்ஷன் எனப்படும் தூய்மை நகரங்களுக்கான பட்டியலிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நகரங்களின் பட்டியலிலும் கோவை முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளது. தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிக்க அரசு அதிகாரிகளோடு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்." என்றார். 

வரும் ஜூன் 25-ம் தேதி ஸ்மார்ட் சிட்டி நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரிய மின் உற்பத்தி நிலையம், உக்கடம் பெரியகுளம் - வாலாங்குளம் மேம்பாட்டுப் பணிகள், மாதிரி சாலை பணிகள் ஆகியவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...