கோவைக்குக் கொண்டு வரப்படும் ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலம்

கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவினால் வெளியேறிய கந்தக அமிலம், கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.

கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவினால் வெளியேறிய கந்தக அமிலம், கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கந்தக அமிலத்தை டிரக்குகள் மூலம் கொண்டு செல்லும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதையடுத்து ஆய்வு நடத்தப்பட்டு, கந்தக அமிலக் கசிவு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், அவற்றை டேங்கர் லாரிகளில் சேகரிக்கும் பணிகளும் நேற்று தொடங்கியது. சேகரிக்கப்படும் கந்தக அமிலத்தை, அதனை பயன்படுத்தும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, உரியப் பாதுகாப்புடன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், 4 லாரிகளில் 84 மெட்ரிக் டன் எடை கொண்ட கந்தக அமிலம் கோவையில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் ஸ்டெர்லைட் ஆலை சேமிப்பு கிடங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது​.



பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை துண்டித்தது. இதன் காரணமாக, போதிய பராமிரிப்பு செய்ய முடியாததால் கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...