மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - அமைச்சர் உதயகுமார் தகவல்

மதுரை : எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


மதுரை : எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2000 கோடியில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என 2015-16ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, செங்கல்பட்டு, பெருந்துறை, தோப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து அனுப்பினார். இதையடுத்து, இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ் அமையப்போகிறது என்ற தகவலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தேர்வு செய்ய ஜூன் 14-ம் தேதி வரை உயர் நீதிமன்ற கிளை கெடு விதித்திருந்தது. ஆனால், மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

இந்நிலையில், இன்று மதுரை மேலூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் அமைப்பதற்காப ஆணை சற்றுமுன் வந்திருப்பதாகவும், மதுரை தொப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி உள்பட 5 இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக கூறினார்.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...