'டிரென்ட்' ஆகும் யோகா: நாம் அதை சரியான முறையில் செய்து வருகிறோமா?

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம்.

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம். 

இந்தியாவில் யோகா-வுக்கு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது. நம்நாட்டில் கற்பிக்கப்பட்ட இந்த கலையின் மீது ஈர்ப்பு கொண்ட வெளிநாட்டவர்கள் இதனை பார்த்து, இதன் பயன்களை அறிந்து பரப்புரை செய்த பிறகு தான் நாம் யோகாவின் பலன்களை அறிந்து கொண்டோம். 

இது குறித்து, லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர். சில்பா ஷா கூறுகையில், "இந்த யோகா செய்வதால் ஆன்மிகம், உடல்நலம் போன்றவை அதிகரிக்கும். மேற்கத்திய நாட்டவர் புகழ் பெறச்செய்த நமது யோகாவை தற்போது நாம் கடைப்பிடித்து வருகிறோம். பொதுவாகேவே யோகா மூன்று காரணங்களுக்காக செய்யப்படுகிறது. உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க, உடலில் சிறிய பிரச்சனைகளை சரி செய்ய, ஆன்மீகத்தில் ஆர்வம் பெறுவதற்கு.

இவ்வாறு யோகா கலையை கற்றுக்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் அதற்குரிய பயிற்சியாளர்கள், யோகா மருத்துவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடம் தான் தேவைக்கேற்ப யோகா கற்க வேண்டும்." என்றார். 

தற்போதைய நவீன யுகத்தில் யோகா கற்றுக்கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன.இணையம் மற்றும் புத்தகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறான சூழலில் எதற்கு மற்றவர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும். 

இது குறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர்.ஹரிணி கூறுகையில், "என்னிடம் 55 வயதான ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக தானாகேவ யோகா கற்றுவருகிறார். சரியான வழி காட்டுதல் இல்லாத காரணமாக அவரது குடல் சற்று இறங்கியது. இதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. 

அவரால் இடதுபுறம் திரும்பி படுக்க முடியாத சூழலும் உருவானது. எனவே, நல்ல பயிற்சியாளர்களிடம் யோகா கற்பதே சிறந்ததாக இருக்கும்." என்றார். 

யோகா என்பது உடல் வளைந்து கொடுக்கக் கூடிய தன்மை பெறுவதற்காக மட்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உடல் பலத்தையும் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...