தூத்துக்குடியில் நடந்த சமத்துவ சமய திருமணம்: சாதி வெறியர்களுக்கு சவுக்கடி

தூத்துக்குடி: சாதி பாகுபாடில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி அருகே மும்மத போதகர்கள் முன்னிலையில் நடந்த பொறியியல் பட்டதாரிகளின் திருமணம் உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


தூத்துக்குடி: சாதி பாகுபாடில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி அருகே மும்மத போதகர்கள் முன்னிலையில் நடந்த பொறியியல் பட்டதாரிகளின் திருமணம் உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியில் பொறியியல் பட்டதாரிகளான சுனில்தேவ், அனுபிரபா ஆகியோரின் திருமணம் யாரும் எதிர்பார்த்திராத முறையில் இன்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்தத் திருமணத்தில், இந்து முறைப்படி மந்திரங்கள் ஓதி, தாலி கட்டிக் கொள்ளவில்லை. மாறாக, சாதி, மத வேறுபாடுகளைக் கலைந்து, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ முறைப்படி மும்மத போதகர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த உலகத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் இதுபோன்று திருமணத்தை நடத்தியாக மணமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். மத ஒற்றுமையைப் போற்றும் வகையில் நடந்த திருமணத்திற்கு வருகை புரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்திச் சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...