அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டும் பணியை தொடங்கியது யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186

கோவை: பொம்மனாம்பாளையம் மற்றும் திருமலையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளில் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186, வகுப்பறை கட்டும் பணியை தொடங்கியது.

கோவை: பொம்மனாம்பாளையம் மற்றும் திருமலையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளில் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186, வகுப்பறை கட்டும் பணியை தொடங்கியது.

இது தொடர்பாக ரோட்டரி கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமலையாம்பளையம் பகுதி அரசு பள்ளியில் வகுப்பறை கட்டும் பணியின் மொத்த மதிப்பு ரூ.8,50,000. இதில், ஆனமலை ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.4, 50,000 நன்கொடையாக அளித்துள்ளது. கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் ரூ.4,00,000 நன்கொடை வசூலித்து அளித்துள்ளது. இந்த திட்டத்தால் ஏழை எளிய மாணவர்கள் 80 பேர் பயன்பெறுவர்.



கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சங்கத்தின் மற்றொரு திட்டமான பொம்மனாம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் நான்கு வகுப்பறைகள் கொண்ட பிளாக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பறைகள் ரூ.32,00,000 செலவில் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நன்கொடையாளர்கள், நிதி அளிப்போரிடமிருந்து இவை பெறப்பட்டன. இந்த திட்டத்தால் 70 அனாதை மாணவர்களும், 100 ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறுவர்.



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...