திருப்பூரில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய 3 பெண்களுக்கு தர்மஅடி

திருப்பூர்: திருப்பூர் அருகே டையிங் நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய பெண்களுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே டையிங் நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய பெண்களுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 

ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சில பெண்கள் தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டு கடந்த சில நாட்களாகக் குப்பை பொறுக்கி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் பூட்டியிருந்த தனியாருக்கு சொந்தமான டையிங் நிறுவனத்துக்குள் ரகசியமாகப் புகுந்த 3 பெண்கள் அங்கிருந்த லேப்டாப், யு.பி.எஸ். பேட்டரி, மொபைல் போன் மின்மோட்டார் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை  திருடியுள்ளனர். 

பின்னர், அந்தப் பொருட்களை குப்பைகள் போல தோணியில் மூட்டைக் கட்டிக் கொண்டு, அருகே இருந்த சாக்கடை வாய்க்காலில் மறைத்து வைத்தனர். 

பின்னர், அவர்களுக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றை வரவழைத்து, அதில், கடத்தி வந்தப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டையிங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தால், அவர்கள் ஏற்றிக்கொண்டிருந்த மூட்டைகளைப் பிரித்து பார்த்தனர். அதில், டையிங் நிறுவனத்தில் திருடிய பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



இது குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிந்ததையடுத்து, அங்கு ஒன்று திரண்ட பொதுமக்கள் அந்த திருட்டு கும்பலை சுற்றிவளைத்து தர்மஅடி கொடுத்தனர். மேலும், இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருட்டு கும்பலைச் சேர்ந்த 3 பெண்களை கைது செய்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...