வரன்முறைபடுத்தப்பட்ட மனைகளுக்கான உத்தரவை பெற மண்டல அலுவலகங்களை அணுக அறிவுறுத்தல்

கோவை: மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.


கோவை: மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனையிடங்கள் வரன்முறை செய்தல் தொடர்பாக, தகுதி வாய்ந்த மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள தனிமனையினை வரன்முறை செய்யும்பொருட்டு மண்டல அலுவலகங்களிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தனிமனைகளை அரசாணைகள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு வரன்முறை செய்யவும் மண்டல உதவி ஆணையாளர்களுக்கு அதிகார பகிர்வு அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரங்கள் அமைத்தல், பத்திரிக்கை செய்திகள் வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைகளை வரன்முறைப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் உள்ள பொதுமக்கள் உடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து உத்தரவுகளை பெற்றுக்கொள்ளலாம். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...