கோவையில் மனநலம் பாதித்த மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை

கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெப்பக்குளம் அருகே உள்ள லிங்கப்ப செட்டி வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முத்து. இவரது மனைவி வேலம்மாள். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததை அடுத்து, மகன் கணேசன் மற்றும் மகள் ராதாவை முத்து பராமரித்து வந்தார்.

நாற்பது வயதான கணேசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் கடந்த 20 வருடங்களாக வீட்டிலே வைத்து பராமரித்து வந்துள்ளனர். அவ்வப்போது கணேசன் ஆக்ரோசத்தோடு நடந்து கொண்டு, அவரது தந்தையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு கணேசன் மீண்டும் ஆக்ரோசமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அவரது வயதான தந்தை, மயக்க மாத்திரைகளை கணேசனுக்கு கொடுத்து வீட்டில் இருந்த அம்மிக்கல்லை கணேசனின் தலையில் போட்டு கொலை செய்தார். 



அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்.எஸ். புரம் போலீசார் கணேசனின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், முத்துவை கைது செய்தனர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...