தமிழக அளவில் மருத்துவ தரவரிசைப்பட்டியலில் சென்னை மாணவி முதலிடம்

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தரவரிசைப்பட்டியலில், மாநில அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார்.



மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தரவரிசைப்பட்டியலில், மாநில அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார். 

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை தருமபுரி மாணவர் அபிஷேக்கும், 3-வது இடத்தை சென்னை மாணவர் பிரவீனும் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மொத்தம் 25,417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்று கூறினார். ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் 10,473 மாணவர்களும், 17,593 மாணவிகளும் மற்றும் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 28,067 ஆக உள்ளது. 5% ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...