பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்கத் தடை

கோவை : பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை குற்றால அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை குற்றால அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட நாட்களில் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. 

இதனிடையே, கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் நுழைய குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை குற்றால அருவிக்கான தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...