தேர்தல் பிரச்சாரத்தின் போது அடிதடி: வானதி சீனிவாசன் உள்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

கோவை: கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், ஆர்.ஜி. நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அ.தி.மு.க., மண்டல் தலைவர் ஆதிநாராயணுடன் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக, கடந்த 2016 மே மாதம் ஆதிநாராயணன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்தப் புகாரை அடுத்து வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது வெரைட்டிஹால் சாலையில் அடிதடி வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, அவர்களிடம் வழக்கு சம்பந்தமான குற்றபத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...