கோவை மத்திய சிறையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: கைதி மாரடைப்பால் மரணம்

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு, சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள், தண்டனை காலம் முடிவதற்குள், சிறையிலேயே மரணம் அடைந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 5-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையில் மருத்துவமனை வசதிகள் போதுமான அளவில் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு கைதி மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். மடத்துக்குளம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சிறைச்சாலையில் ஒருவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டால் போதுமான மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பாதுகாப்புக்கு காவலர்கள் வந்த பின்புதான் மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல முடியும். ஆனால், சிறைத்துறையின் இந்த காலதாமதத்தால் தான் இறப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...