உதகையில் கொட்டித் தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் தீவிர மழைப் பொழிவைப் பெறும். இந்தாண்டு குறித்த நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மலை தோட்ட காய்கறிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரமாக நீடித்த கனமழையால் உதகை நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...