ஹார்டுவேர் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த கோவை போலீசார்

கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மரக்கடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவருக்கு சொந்தமான மகாதேவ் ஹார்டுவேர் என்ற கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தநிலையில், ஹார்டுவேர் கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள் முன்னிலையில் உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) சோமசுந்தரம் தலைமையில் ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் அவர்களது குழுவினர் இணைந்து சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை தேடி வந்தனர். 



இந்த நிலையில், சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை நேற்று கோவை ரயில் நிலையம் முன்பு வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து களவுபோன ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...