காரமடை அருகே விஷம் குடித்து கணவர் பலி, மனைவி கவலைக்கிடம் : கடன் தொல்லை காரணமா?

கோவை: காரமடை அருகே விஷம் குடித்து கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை: காரமடை அருகே விஷம் குடித்து கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு விஷாலினி (10) என்ற மகள் உள்ளார். பிரசன்னா காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (47) என்பவருக்குச் சொந்தமான குடிநீர் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.



மேலும், தனது குடும்பத்துடன் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தில் வசித்து வந்தார். அவருக்கு பக்கவாத நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. 

இந்த நிலையில், பிரசன்னாவும் அவரது மனைவியும் நேற்று இரவு விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காரமடை காவல் ஆய்வாளர் சக்திவேல், உதவி ஆய்வாளர் பொன்ராஜ், தனிப்பிரிவு தலைமை காவலர் சரவணன் ஆகியோர் சம்பவ உயிரிழந்த பிரசன்னாவின் உடலை மீட்டனர்.

மேலும், உயிருக்குப் போராடிய அவரது மனைவியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் விஷம் குடித்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...