கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தியவர் உயிரிழப்பு: தலைமை நீதிபதி வருத்தம்

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கலந்து கொண்டார். 



அப்போது அவர் பேசுகையில், "கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய மகேந்திரன் (35) என்பவர் உயிரிழந்ததை செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தேன். தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், சுத்தப்படுத்த தேவையான தக்க உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. 

கழிவு நீரை மனிதர்கள் சுத்தப்படுத்த கூடாது என்பது சட்டமாக உள்ளது. ஒரு சில பணிகளைத் தவிர மற்ற விதமாக இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.

கோவையில் மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக அவருக்கு தக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா?" போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...