கோவை மண்டலத்திற்கு வருகின்றன 250 புதிய பேருந்துகள்

கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 515 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 515 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், கோவை மண்டலத்திற்கு 250 புதிய மப்சல் (mufsal) பேருந்துகள் வரவுள்ளன. இது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த 250 பேருந்துகளில் 75 கோவை மாவட்டத்திற்கும், 25 நீலகிரி மாவட்டத்திற்கும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு 150 பேருந்துகளும் வருகின்றன வரவுள்ளன. இவை அனைத்தும் மப்சல் பேருந்துகள்.

வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளில் குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதியுடனான பேருந்துகள் அடுத்த கட்டமாக கோவை மண்டலத்திற்கு வரவுள்ளன." என்றார்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 515 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதில், சேலம் மாவட்டத்திற்கு 78, விழுப்புரம் மாவட்டத்திற்கு 60, மதுரை மாவட்டத்திற்கு 32, திருநெல்வேலி மாவட்டத்திற்கு  69, மற்றும் கும்பகோணத்திற்கு 64 புதிய பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.   

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...