பலனளிக்காத 'பேட்ச்-வொர்க்': குண்டும்-குழியுமாக மாறும் கோவை சாலைகள்

கோவை: தார் சாலைகளை சீரமைக்கும் 'பேட்ச்-வொர்க்' பணிகள் தரமாக செய்யப்படாததால், நகரின் சாலைகள் மீண்டும் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது.

கோவை: தார் சாலைகளை சீரமைக்கும் 'பேட்ச்-வொர்க்' பணிகள் தரமாக செய்யப்படாததால், நகரின் சாலைகள் மீண்டும் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது.

பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பராமரிப்பு, தொலைத்தொடர்பு கம்பி பதித்தல் போன்ற பணிகளுக்காக சாலைகளில் குழி தோண்டப்படுகின்றன. சில சாலைகளில் பணி முடிந்ததும் குழிகள் முறையாக மூடப்படுவதில்லை.

இதனால் தார் சாலைகளில் விரிசல்களும் பள்ளங்களும் உருவாகி வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. மழைநீர் இந்த பள்ளங்களில் தேங்குவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.

நிதி ஒதுக்கீடு

இவ்வாறு சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் (TURIP) கீழ் ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 'பேட்ச்-வொர்க்' பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



முதற்கட்டமாக பாரதி பார்க், புலியகுளம், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, ராமகிருஷ்ணாபுரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் சமீபத்தில் நடந்து முடிவடைந்தன.

ஆனால், சாலை சீரமைப்பு பணிகள் தரமாக மேற்கொள்ளப்படாததால் 'பேட்ச்-வொர்க்' செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் பள்ளம் உருவாகி வாகன விபத்துகளை ஏற்படுத்தும் ஆபத்தான சாலையாக மாறியுள்ளது.



இதுகுறித்து, புலியகுளம் பகுதியில் வசிக்கும் ஐ.டி., ஊழியர் பாலாஜி என்பவர் கூறுகையில், "தார் சாலைகளில் தோண்டப்படும் குழிகளை மீண்டும் தார் பூசி சீரமைப்பதில்லை, மண்ணை நிரப்பிவிட்டு அறிவிப்பு பலகை கூட வைக்காமல் சென்று விடுகின்றனர்.

இவை நாளடைவில் உயிரை பறிக்கும் பள்ளங்களாக மாறுகின்றன. மேலும், 'பேட்ச்-வொர்க்' பணிகள் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் அதே இடத்தில் குழிகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, சாலை வளைவுகளில் ஏற்பட்டுள்ள குழிகளால் வாகன விபத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது." என்றார்.

புலியகுளம் சலையில் சமீபத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் 'பேட்ச்-வொர்க்' பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் தற்போது சேதமடைந்துள்ளன.



இதேபோல், பள்ளி, கல்லூரி, குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பாரதி பார்க் சாலைகளில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்தும் மிக மோசமான நிலையில் உள்ளது.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன் கூறுகையில், "ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தினரின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் தரமாக செய்யப்படுவதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் 'பேட்ச்-வொர்க்' செய்யப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்வு செய்த பிறகே தொகையை செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட காலம் வரை 'பேட்ச்-வொர்க்' செய்யப்பட்ட இடம் சீராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்க வேண்டும். மேலும், நகரை அலங்கரிக்கும் திட்டங்களை விட, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முதலில் மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...