சார்ஜாவில் இருந்து கோவைக்கு தங்க கட்டிகள் கடத்த முயற்சி : 3.6 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை: சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணியை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணியை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற பயணி கொண்டு வந்த உருளை வடிவ உலோகம் ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட அந்த உலோகத்தை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமல்ராஜை கைது செய்தனர். 

இந்நிலையில், அந்த உருளையை ஆய்வு செய்த போது, அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்திவரப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அமல்ராஜை கைது செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று அமல்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் எனவும், அது 3.6 கிலோ எடையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...